Tuesday, June 07, 2011

திரைப்படம்: அமெரிக்காவின் மாவோயிஸ்ட் கருஞ் சிறுத்தைகள்

அமெரிக்காவில், அறுபதுகளில் கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக ஆயுதமேந்திப் போராடிய "கருஞ் சிறுத்தைகள்" (Black Panthers) பற்றிய திரைப்படம் இது. கறுப்பின மக்களை அரச பயங்கரவாத அடக்குமுறையில் இருந்து பாதுகாப்பதற்காகவே அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். குறிக்கோளின்றி வாழ்ந்த கறுப்பின பாட்டாளிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். மக்களுக்கு அரசியல் அறிவு புகட்டினார்கள். ஒரு காலத்தில், அமெரிக்காவின் மிகவும் கட்டுக்கோப்பான தீவிர இடதுசாரிக் குழுவாக அறியப்பட்டது. மார்க்சிய- லெனினிச- மாவோயிச பாதையை அமைப்பின் அரசியல் சித்தாந்தமாக்கினார்கள். அமெரிக்காவின் பிற இடதுசாரி இயக்கங்களுடன் சிறந்த உறவுகளைக் கொண்டிருந்தனர். அதனால், அமெரிக்க போலிஸ் அடக்குமுறைக்கு பலியாகி இயக்கம் அழிந்து விட்டாலும், எஞ்சிய உறுப்பினர்களுக்கு கியூபா அரசியல் தஞ்சம் வழங்கியது.
(பிற்குறிப்பு: Youtube இது போன்ற வீடியோக்களை நீண்ட காலம் பாதுகாப்பதில்லை. அதனால் ஆர்வமுள்ள நண்பர்கள் உடனடியாக சேமித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.)

Part 1

Part2

Part 3

Part 4

Part 5

Part 6

Part 7

Part 8

Part 9

Part 10

Part 11

Part 12

2 comments:

இ.பா.சிந்தன் said...

நன்றி தோழர்...
இப்படம் கருஞ்சிருத்தைகளைப்பற்றி அறிவதற்குதவுகிற படைப்பு.
எனினும் 'ஜட்ஜ்' என்கிற கதாபாத்திரத்தின் வாயிலாக கதை சொல்லப்படாமல், ஹுவே அல்லது பாபி சீயேல் ஆகியோரின் பார்வையில் எடுக்கப்பட்டிருந்தால் இன்னும் நிறைய சுவாரசியமாகவும் நிறைய தகல்வல்களை தருவிப்பதாகவும் அமைந்திருக்கும்...